நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லை - கமிஷனர்
சென்னை: நித்தியானந்தா மீது இதுவரை எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கு கர்நாடக போலீசுக்கு மாற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நித்யானந்தா மீதான மோசடி வழக்கை நாங்கள் தான் விசாரிப்போம். கற்பழிப்பு வழக்கில் கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் கர்நாடக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். கொலை மிரட்டல் சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது.
நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை.
நித்யானந்தா பற்றி விசாரிக்க வெளிமாநிலங்களுக்கு இதுவரை தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை. நித்யானந்தா சென்னைக்கு வரும்போது எங்கெங்கு தங்குவார், யார், யார் அவரை சந்திப்பார்கள், யார், யாரோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, அவரது பண பரிவர்த்தனை எப்படி நடைபெற்றது என்பது பற்றி இப்போது பூர்வாங்க விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.
மோசடி வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கண்டிப்பாக விசாரிப்போம். கர்நாடக போலீசுக்கு, தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றார்.
லெனின் கருப்பனுக்குத்தான் சிக்கல்?
இதற்கிடையே, நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை வீடியோவில் படம் பிடித்த அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது.
தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். அதில்,
நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது.
இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன.
மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
லெனின் எங்கே...?
இதற்கிடையே கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து, அவரிடம் நித்தியானந்தா தொடர்பான புதிய வீடியோவைக் கொடுத்துத புகார் செய்த லெனின் கருப்பன் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரனிடம் கூறுகையில், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை.
காந்தப் படுக்கை மோசடி குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்கிறேன் என்றார் ராஜேந்திரன்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications