இலங்கை: 'ரா' மீதான குற்றச்சாட்டு-மறுக்கிறார் நிரூபமா

ஈழத்தில் நடந்த போரின்போது ராணுவத்தினர் நிகழ்த்திய அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள், கன ரக ஆயுதங்களால் அப்பாவிகளைக் கொன்று குவித்தது குறித்து எத்தனையோ மனித உரிமை அமைப்புகள் காட்டுக் கத்தல் கத்தியும் அதை பெரிய அளவில் பான் கி மூன் கண்டு கொள்ளவில்லை.
போர் முடிந்த பின்னரும் கூட தொடர்ந்து வந்த மனித உரிமை மீறல்கள், ராணுவத்தின் போர்க் குற்றச் செயல்களை விசாரிக்குமாறு பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தனி நபர்கள் கோரிக்கை விடுத்தபோதும் அதை பான் கி மூன் கண்டு கொள்ளவில்லை.
மாறாக, ராஜபக்சே அரசு மீது யாராவது போர்க் குற்றச்சாட்டை சுமத்தினாலோ அல்லது குறை கூறினாலோ அதை மறுக்கும் வகையில், கிட்டத்தட்ட ராஜபக்சேவின் பி.ஆர்.ஓ போல செயல்பட்டு, பேசி வந்தார் பான் கி மூன்.
ஈழப் போரின்போதும், போருக்குப் பிந்தைய சூழ்நிலை தொடர்பாகவும் பான் கி மூனின் செயல்பாடுகள் உலக அளவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.
சமீபத்தில் கூட ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் நவி பிள்ளை, இலங்கைப் போரின் போது இரு தரப்பும் நிகழ்த்திய போர்க் குற்றச் செயல்கள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா.வை கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து ராஜபக்சேவுடன் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டார் பான் கி மூன். அப்போது ஐ.நா. இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று முகத்தில் அடித்தாற் போல பேசினார் ராஜபக்சே.
இதையடுத்து தற்போது பான் கி மூனின் நிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈழப் போர் முடிவடைந்த நிலையில் இலங்கை வந்தார் பான் கி மூன். பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவரும், ராஜபக்சேவும் கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டனர்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் விரைவாக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் அது. அந்த ஒப்பந்தம் போட்டு ஒரு வருடத்தைத் தாண்டியுள்ள நிலையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்கவில்லை என்று இப்போது பான் கி மூன் குறை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை. இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மருத்துவ உதவி உள்பட பல்வேறு வசதிகளை முழுமையாக செய்யவில்லை. முன்னாள் தளபதி பொன்சேகாவை சிறையில் அடைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளார்.
இதே குற்றச்சாட்டுக்களைத்தான் போர் முடிந்ததிலிருந்து பல்வேறு மனித உரி்மை அமைப்புகளும் கூறி வந்தன. ஆனால் அப்போதெல்லாம் கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருந்த பான் கி மூன் இப்போது திடீரென தமிழர்கள் மீது பாசம் கொண்டவர் போல பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரா மீதான குற்றச்சாட்டு- மறுக்கிறார் நிரூபமா:
இதற்கிடையே, இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது, இந்திய உளவு அமைப்பான ரா, ராஜபக்சேக்கு எதிராகவும், பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில், இலங்கை அமைச்சர் நந்தன குணதிலகே கூறியிருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய நிரூபமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உளவுத்துறைக்கு என்று சில வரம்புகள் வகுக்கப்பட்டு உள்ளன. இவற்றை உளவுத்துறை அதிகாரிகள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.
அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும், இந்த வரம்புகளை மீறி செயல்பட மாட்டார்கள். இதை நான் சமீபத்தில் இலங்கை சென்றபோது, அதிபர் ராஜபக்சேயிடமும், அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்றார்.
நிருபமா அமெரிக்கா பயணம்:
இந் நிலையில் இருதரப்பு உயர் தொழில்நுட்ப வர்த்தகம், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்த நிருபமா ராவ், அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
வரும் 14ம் தேதி வாஷிங்டன் வரும் நிருபமா அமெரிக்க வர்த்தகத் துறை துணைச் செயலாளர் டென்னிஸ் ஹைடவருடன் ஆலோசனை நடத்துவார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications