நம்பிக்கையில்லா தீர்மானம்: லாலு-முலாயம் திட்டம், பாஜக 'எஸ்கேப்'!

ஆனால், இதை ஆதரிக்க பாஜக மறுத்துவிட்டது. இதையடுத்து தங்கள் திட்டத்தை இரு தலைவர்களும் கைவிட்டுவிட்டனர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினப் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு இல்லாமல் மகளிர் மசோதாவை நிறைவேற்றியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் லாலு, முலாயம் ஆகியோர் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.
மேலும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்று பாஜகவிடம் லாலுவும் முலாயமும் கூறினர்.
ஆனால், இதை ஏற்க பாஜக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இப்போதைய நிலையில் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் மக்களிடையே பெரும் கெட்ட பெயர் ஏற்படும் என பாஜக கருதுவதாகத் தெரிகிறது. மேலும் இந்த தீர்மானத்தால் லாலு, முலாயமுக்கே அதிக அரசியல் லாபம் கிடைக்கும் என்றும், தனக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சும் என்றும் பாஜக நினைக்கிறது.
அதே சமயம் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சிவசேனா, அஜீத் சி்ங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் உள்ளிட்ட கட்சிகளுடன் இரு யாதவ்களும் பேச்சு நடத்தினர். அங்கும் ஆதரவு கிடைக்கவில்லை.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர குறைந்தது 50 எம்பி்க்களின் ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தங்களுக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் நம்பிக்கையில்லா தீர்மான முயற்சிகளை இருவரும் கைவிட்டுள்ளனர்.
இது குறித்து லாலுவிடம் இன்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு எங்கள் கட்சியில் போதுமான எம்.பி.க்கள் இல்லை. 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அது போன்ற தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் இல்லை. இது குறித்து வெளியான தகவல் தவறானது என்றார்.
முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு எங்கள் கட்சிக்கு எம்.பிக்கள் இல்லை. 21 பேர் மட்டுமே உள்ளனர் என்றார்.
அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற போவதாக விடுத்த மிரட்டல் குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்திக்கும் எண்ணம் இல்லை என்றார் முலாயம்.
லாலு பிரசாத் கூறுகையில், ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்திக்க நேரம கேட்டிருக்கிறோம். ஆனால் அதற்கான நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றார்.
மம்தாவுடன் லாலு-முலாயம் சந்திப்பு:
முன்னதாக, நேற்று காலை முலாயம் சிங்கையும், லாலு பிரசாத் யாதவையும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.
உள் ஒதுக்கீடு இல்லாமல் மகளிர் மசோதா தாக்கலாவதை எதிர்த்த இந்த 3 தலைவர்களின் சந்தி்ப்புக்குப் பிறகே மாலையில் நடந்த ஓட்டெடுப்பை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது இந்த புதிய கூட்டணி வலுவடைந்தால் அது காங்கிரஸ் அரசுக்கு பெரும் ஆபத்தில் போய் முடியவும் வாய்ப்புள்ளது.
ஆனால், அடுத்தாண்டு வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தங்களது கூட்டணி மம்தாவுக்கு மிகவும் அவசியம் என்பதால் திரிணமூல் தங்களுக்கு எதிரான எந்த வேலையிலும் இறங்காது என்று காங்கிரஸ் கருதுகிறது.
இன்றும் அமளி:
இந் நிலையில் மக்களவையில் மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு இறுதியில் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications