மகளிர் மசோதா- உள்ஒதுக்கீடு உடனடியாக வேண்டும்: திருமா வலியுறுத்தல்
சென்னை: மகளிர் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடுக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்தாக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு சட்டப்படி உறுதி செய்யப்பட வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் காரணமாக மகளிர் மசோதா நீண்டகாலமாக நிறைவேற்றப்பட முடியாத நிலையிலிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அன்றைய பாஜக அரசும், இன்றைய காங்கிரஸ் அரசும் தயக்கம் காட்டுவது ஏன் என்று விளங்கவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும் என்பது ஜனநாயகப்பூர்வமானது. ஆனால், 33 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே அளிப்பது என்ற முடிவு மகளிருக்கான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக அமையாது.
அத்துடன் அவ்வாறு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டில் தலித், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லை என்பதும் ஜனநாயக விரோதப் போக்கேயாகும்.
13 ஆண்டுகளாக இம்மசோதாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் உள்ஒதுக்கீட்டை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இவ்வாறான நிலையில், ஜனநாயகத்தை முழுமைப்படுத்தாத அரைகுறை நிலையில், இம்மசோதா மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது முழுமையான மனநிறைவை அளிக்கவில்லையென்றாலும் காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு எனும் சமூகநீதி, சட்டப்படி உரிமையாகப் பரிணாமம் பெற்றுள்ளது என்னும் அளவில் சற்று ஆறுதல் அளிக்கிறது.
முதலில் பொதுவான உரிமையை மீட்டு பின்னர் குறிப்பான உரிமையை வென்றெடுப்போம் என்னும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இடஒதுக்கீட்டையே ஏற்றுக்கொள்ளாத ஆதிக்கச் சக்திகளிடமிருந்து இடஒதுக்கீடு என்னும் அந்த உரிமையை வென்றெடுப்பது முதற்கட்ட வெற்றியேயாகும்.
அத்தகைய உரிமையை நிலைநாட்டிய பிறகு உள்ஒதுக்கீடு என்னும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவதுதான் இப்போதைக்கு நாம் கையாள வேண்டிய அணுகுமுறையாக உள்ளது.
ஆகவே, இடஒதுக்கீடு இப்போதே வேண்டும், உள்ஒதுக்கீடு உடனே வேண்டும் என்னும் கோரிக்கை முழக்கமே நமது அணுகுமுறையாக அமைய வேண்டும்' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications