தலிபான்கள் கடத்தலாம் என அச்சம்- ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: தலிபான்கள் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தக் கூடும் என்ற அச்சம் காரணமாக காபூலுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களையும், இந்தியர்களின் சொத்துக்களையும், தூதரகத்தையும் குறி வைத்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர் தீவிரவாதிகள்.
இந்த நிலையில் தலிபான்கள் அல்லது அல் கொய்தாவினர், ஏர் இந்தியா விமானங்களைக் கடத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காபூலுக்கு வரும், காபூலிலிருந்து செல்லும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
விமானத்தில் ஏற்றப்படும் அனைத்து லக்கேஜ்களும் மிகத் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு விமானத்துக்கும் 2 அடுக்குப் பாதுகாப்பு போடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஆறு முறை காபூலுக்கு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications