மகளிர் மசோதா- என் பிணத்தின் மீது தான் நடக்கும்: உக்கிரத்தின் உச்சியில் லாலு!

பாட்னா அருகே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய லாலு்,
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் அதை விரும்பவில்லை. ராஜ்யசபாவில் வலுக்கட்டாயமாக மகளிர் சட்டதிருத்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றி இருக்கலாம்.
ஆனால் லோக்சபாவில் அப்படி செய்ய இயலாது. மீறி இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றால் நாங்கள் மத்திய அரசை கவிழ்ப்போம்.
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முயன்றால் முன்கூட்டியே தேர்தல் வருவது உறுதி. எனவே இடைத்தேர்தலை சந்திக்க நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் சிறுபான்மை பிரிவு பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். சமூக நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.
அத்தகைய உள் ஒதுக்கீடு செய்யாமல் மகளிர் மசோதாவை கண்டிப்பாக நிறைவேற்ற விடமாட்டேன். மீறி முயன்றால், என் பிணத்தின் மீது ஏறி நின்று தான் அந்த மசோதாவை கொண்டு வர முடியும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்து விட்டது. அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மகளிர் மசோதா விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என்றார் லாலு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications