கல்கி ஆசிரமத்தில் பக்தைகளுக்கு 'போதை பிரசாதம்'! - விசாரிக்க கம்யூ. வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தைகளுக்கு 'போதை பிரசாதம்' கொடுத்து செக்ஸ் லீலைகள் அரங்கேற்றப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர்.

இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில் ஆசிரமத்தை சுற்றி உள்ள தொண்டூர், உப்பள மடுகு, நிலவாய், காம்பாக்கம் போன்ற கிராம மக்களிடம் இருந்து 500 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது புகார் எழுந்துள்ளன.

இது பற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்திலும் கிராம மக்கள் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ராகவலு நிருபர்களிடம் கூறுகையில்,

எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.

அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.

கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் அங்குள்ள கிராம மக்கள் என்னிடம் புகார் கூறினார்கள். இது பற்றியும் ஆந்திர அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

கல்கி பகவானின் மோசடிகளுக்கு உடந்தையாக உள்ள ஊழல் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆன்மிகம் என்ற போர்வையில் ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்து வரும் போலி பகவான்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.

கல்கி பகவான் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+