பைக்கில் சென்ற ஐஎன்டியுசி தலைவருக்கு சராமரி வெட்டு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று காலை பைக்கில் சென்ற ஐஎன்டியுசி தலைவருக்கு சராமரி அரிவாள் வெட்டு விழுந்தது.
கோவில்பட்டி பெரியசாமி நகர் புதுக்கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர். லட்சுமி மில்லில் வேலை செய்து வருகிறார். அங்கு ஐஎன்டியுசி பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.
வடக்கு புதுக்கிராமம் 3வது தெருவை சேர்ந்தவர் ரமணி. இவர் லட்சுமி மில்லில் எதிர் புறம் சாலுன் கடை வைத்துள்ளார். இதனால் அவ்வப்போது ராஜசேகர் மில்லுக்கு செல்லும்போது அவருடன் பைக்கில் செல்வது வழக்கம்.
இதுபோல் இன்று காலை 7 மணிக்கு ராஜசேகர் பைக்கில் புறப்பட்டார். அவருடன் ரமணியும் வந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பைக்கை ஒருவர் மறித்தார்.
அவர் கையில் அரிவாள் மற்றும் கம்பி வைத்திருந்தார். இதை கண்ட ராஜசேகர் பைக்கை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். பின்னால் இருந்த ரமணி அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் அந்த நபர் ராஜசேகரை விரட்டி சென்று சாரமரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜசேகர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications