பென்னாகரத்தில் திமுக அத்துமீறல்: சிபிஎம் புகார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரம் சட்டசபைத் தொகுதியில் வாக்காளர்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் திமுகவினர் பணம் வினியோகித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஈரோட்டில் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பென்னாகரம் இடைத் தேர்தலில் ஆளும் தி்முகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 வீதம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

மேலும், இலவச பொருள்களையும் விியோகம் செய்து வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மொத்தமாக பணம் கொடுத்து வருவதாக நூற்றுக்கணக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இது போன்ற அத்துமீறல்களைத் தேர்தல் ஆணையம் உடனே தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொது விநியோக முறையை பலப்படுத்தவும் வலியுறுத்தி ஏப்ரல் 8ம் தேதி நாடு முழுவதும் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்த உள்ளோம்' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+