ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்-சிஆர்பிஎப் வீரர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில், மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் காயமடைந்தார்.
புகழ் பெற்ற லால் செளக் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
லால் செளக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் வந்தனர். வந்த வேகத்தில் பாதுகாப்புப் படையினரை மிக நெருக்கத்தில் வைத்து அவர்கள் சரமாரியாக சுட்டனர்.
இதில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு வீரர் காயமடைந்தார். பின்னர் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிப் போய் விட்டனர்.
பிஸ்டல்கள், ரிவால்வர்களுடன் தீவிரவாதிகள் வந்து தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். கூடுதல் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோகர் பஜார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications