சரத் பவார் குறித்துக் கிண்டல் பேச்சு - காங். செய்தித் தொடர்பாளர் பதவி பறிப்பு
டெல்லி: மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவாரை, விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக நக்கலாக விமர்சித்துப் பேசியதற்காக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சத்யவிராத் சதுர்வேதியிடமிருந்து அப்பதவியை காங்கிரஸ் மேலிடம் பறித்துள்ளது.
சதுர்வேதி இது போல எடக்கு மடக்காகப் பேசுவது முதல் முறையல்ல. முன்பு பிரதமர் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு சமாஜ்வாடிக் கட்சியின் ஆதரவு மிக மிக அவசியம் என்ற நிலையில் காங்கிரஸ் இருந்தபோது, தடாலடியாக அமர்சிங் (அப்போது அவர் சமாஜ்வாடி பொதுச் செயலாளராக இருந்தார்) குறித்து ஏடாகூடமாக பேசி காங்கிரஸ் மேலிடத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் சதுர்வேதி.
இந்த நிலையில் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக சரத்பவாரை விமர்சித்துப் பேசியிருந்தார் சதுர்வேதி. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியிடம் புகார் செய்தது பவாரின் தேசியவாத காங்கிரஸ்.
இதையடுத்து சதுர்வேதியிடமிருந்து செய்தித் தொடர்பாளர் பதவியை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மீடியா துறை தலைவர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், சதுர்வேதி கட்சி செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications