ஐபிஎல் போட்டிகள் மூலம் அரசுக்கு ரூ. 200 கோடி வரி வருவாய்
டெல்லி: தொட்டால் பொன் என்பது ஐபிஎல்லுக்கு மிகச் சரியாக பொருந்தும். இவர்கள் தொட்டதெல்லாம் பணம் என்பது ஒரு புறம் இருக்க இவர்களால் மத்திய அரசுக்கு ரூ. 200 கோடி அளவுக்கு வரிகள் மூலம் வருவாயாக கிடைக்குமாம்.
இந்தக் கணக்கை அரசு வெளியிடவில்லை. மாறாக வரி நிபுணர்கள் இதைக் கணித்துச் சொல்லியுள்ளனர்.
3வது ஐபிஎல் தொடர் போட்டிகளின் போது, வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், வர்னணையாளர்கள் ஆகியோரின் சம்பளத்தின் மூலம் அரசுக்கு ரூ. 100 கோடி அளவுக்கு வருமான வரி கிடைக்குமாம்.
மேலும் ரூ 100 கோடி வருமானம், விளம்பரங்கள், மார்க்கெட்டிங், ஆலோசனை சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்குமாம். அதாவது இது மறைமுக வரி (சேவை வரி).
ஒரு நிகழ்ச்சியை வணிக நோக்கில் நடத்தினால் அதற்கு சேவை வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டி முழுக்க முழுக்க வர்த்தக நோக்கில்தான் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த பிப்ரவரி 22ம் தேதி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான வரி நிவாரண நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது. இதன் காரணமாகவே ஐபிஎல் போட்டிகள் மூலம் அரசுக்கு ரூ. 200 கோடி வரை வருமானம் வந்து சேருகிறது.
ஆனால் தன்னை ஒரு சேரிட்டி நிறுவனம் என்று வாய் கூசாமல் கூறி வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது நினைவு கூறத்தக்கது.
கடந்த 2007-08ம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈட்டிய வருமானம் ரூ. 1000 கோடியாகும்.
தற்போது உள்ள ஐபிஎல் அணிகள் பெரும்பாலானவற்றின் உரிமையாளர்களாக இருப்பவர்கள் மிகப் பெரும் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது அத்தனை இந்தியர்களுக்கும் உண்மையிலேயே மிகப் பெருமையான விஷயம்தான்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications