முல்லைப் பெரியாறு நிபுணர் குழுவை எதிர்ப்பது ஏன்?: தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக குழு அமைக்க உத்தரவிட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டு, இப்போது எதிர்ப்பது ஏன் என்று தமிழக அரசின் வக்கீலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை தற்போது அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த பெஞ்ச், புதிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இக்குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைவராக இருப்பார். தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி மற்றும் மத்திய அரசின் சார்பில் இருவர் இருப்பார்கள் என்று அறிவித்தது.
இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்தக் குழுவில் இடம் பெறத் தேவையில்லை என்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் போட்டது. இதையடுத்து தமிழக அரசு இந்தக் குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில் உச்சநீதி்மன்றம் தனது கடமையை தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படுவதாக கூறியிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெயின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன், இந்தக் குழு தேவையில்லாதது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயின், தமிழக, கேரள அரசுகளிடம் கேட்டுத்தான் குழு அமைக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் இப்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று வினவினார்.
பின்னர் இதில் நான் மட்டும் முடிவு செய்ய முடியாது. மற்ற நீதிபதிகளுடனும் (அரசியல் சாசன பெஞ்ச்) கலந்து ஆலோசனை செய்த பின்னர்தான் விசாரிக்க முடியம் என்று அறிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications