பென்னாகரம்: அரசு காரை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய துணை சபாநாயகர்!
பென்னாகரம்: பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு தமிழக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி அரசுக்கு சொந்தமான, ஸ்கார்பியோ கார் பயன்படுத்தியதை அடுத்து அந்த காரை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம் இடைத்தேர்தல் பணியில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய அனைத்து கட்சிகளும், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
திமுகவினர், வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்கள் கொடுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
சைரன் பொருத்திய கார்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் பார்வையாளர் எச்சரித்தார். இதனையடுத்து திமுக அமைச்சர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பென்னாகரம் தேர்தல் பிரசார பணிக்கு, தமிழக துணை சபாநாயகர் துரைசாமி அரசுக்கு சொந்தமான, ஸ்கார்பியோ காரை பயன்படுத்தி வந்தார்.
இதுகுறித்து தேர்தல் பார்வையாளருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விசாரிக்க, போலீசாருக்கு தேர்தல் பார்வையாளர் உத்தரவிட்டார்.
போலீசார் விசாரணையில், "சைரன்' பொருத்தப்பட்ட அரசு வாகனத்தை தமிழக துணை சபாநாயகர் துரைசாமி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் இது குறித்து முழுமையான தகவலை தெரிவிக்க மாவட்ட எஸ்பி சுதாகர் மறுத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications