விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் மனைவியின் புகார்- சிறைத்துறை கூடுதல் டிஜிபி மறுப்பு
சென்னை: மதுரையில் கார் விபத்தில் உயிரிழந்த டிஐஜியின் கார் டிரைவர் மனைவி தன் மீது குற்றம் சாட்டியுள்ளதை சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர் மறுத்துள்ளார்.
மதுரை கே.புதூரை சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவர், மதுரை மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு காரை ஓட்டும் டிரைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
பாலமுருகன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை சிறைத்துறை டி.ஐ.ஜி. அனுப்பியதாக சொல்லி சிறைத்துறை காரை எடுத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டார்.
விருதுநகர் பை-பாஸ் சாலையில் கார் சென்றபோது விபத்தில் சிக்கியது. இதில் பாலமுருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மீது செல்வி புகார் கூறியுள்ளார். குறிப்பாக கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர் சொல்லித்தான் தனது கணவர் காரை எடுத்துச் சென்றதாக அவர் கூறியுள்ளார். மேலும், கணவரின் உடலை வாங்கவும் அவர் மறுத்து விட்டார்.
கூடுதல் டி.ஜி.பி. ஷியாம் சுந்தரின் உறவினர்கள் ரயிலில் திருநெல்வேலி செல்வதாகவும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அவர்களை வரவேற்று, காரில் கன்னியாகுமரிக்கு அழைத்து செல்லவேண்டும் என்றும், மதுரை டி.ஐ.ஜி. கூறியதன் பேரில், அவரது காரை எடுத்துக் கொண்டு எனது கணவர் நள்ளிரவு புறப்பட்டார். அதில் தான் விபத்தில் சிக்கி அவர் இறந்துவிட்டார்.
திருநெல்வேலிக்கு வந்த கூடுதல் டி.ஜி.பி.யின் உறவினர்களை வரவேற்று அழைத்து செல்ல நெல்லை சிறையில் இருந்து யாரையாவது அனுப்பியிருக்கலாம். தேவையில்லாமல் எனது கணவரை அனுப்பி உயிர் பலி வாங்கி விட்டார்கள். எனது கணவரை இழந்து, எனது 2 குழந்தைகளோடு நான் அனாதையாக நிற்கிறேன் என்று செல்வி குமுறியுள்ளார்.
அவரை சமாதானப்படுத்திய போலீஸார், பாலமுருகனின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.
கூடுதல் டிஜிபி சொல்லித்தான் தனது கணவர் காரை எடுத்துக் கொண்டு நெல்லைக்குப் போனதாக செல்வி கூறியுள்ளது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் புகாரை ஷியாம் சுந்தர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது குடும்பத்தினர் யாரும் திருநெல்வேலிக்கு போகவில்லை. அவர்கள் எல்லோரும் சென்னையில் உள்ளனர். நான் குறிப்பிட்ட டிரைவரை திருநெல்வேலிக்கு காரில் அனுப்ப சொல்லி யாருக்கும் எந்த உத்தரவும் போடவில்லை. இந்த விஷயத்தில் எனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இறந்துபோன பாலமுருகனின் செல்போனை ஆய்வு செய்தால், அவரை திருநெல்வேலிக்கு யார் காரில் போக சொன்னார்கள் என்பதை கண்டறியலாம் என்றார் அவர்.
இதையடுத்து அனைவரின் கவனமும் மதுரை சிறைத்துறை அதிகாரிகள் மீது திரும்பியுள்ளது. யார் சொல்லி பாலமுருகன் காரை எடுத்துக் கொண்டு நெல்லைக்குப் போனார் என்பதை மதுரை சிறைத்துறை டிஐஜி சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெல்லைக்குக் கிளம்புவதற்கு முன்பு டிஐஜி சொல்லி தான் போவதாக சக ஊழியர்களிடமும், மனைவியிடமும் கூறிச் சென்றுள்ளார் பாலமுருகன். டிஐஜியின் காரிலேயே அவர் போயிருக்கிறார். ஆனால் அந்தக் காரில் டிஐஜிக்களின் காருக்குரிய ஒரு நட்சத்திரம் இருக்கவில்லை. மாறாக 3 நட்சத்திரம் இருந்துள்ளது.
3 நட்சத்திரம் என்பது டிஜிபி அல்லது கூடுதல் டிஜிபி ஆகியோரின் கார்களில் மட்டுமே இருக்கும் சின்னமாகும். எனவே இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது தமிழக அரசின் உள்துறை தலையிட்டுள்ளது. பாலமுருகனை நெல்லைக்குப் போகுமாறு உத்தரவிட்டது யார், சிறைத்துறை டி.ஐ.ஜி. இந்த உத்தரவை போட்டாரா? இதில் கூடுதல் டி.ஜி.பி. ஷியாம் சுந்தர் சம்பந்தப்பட்டுள்ளாரா? ரயிலில் வந்தது அவரது உறவினர்களா? உள்ளிட்ட கேள்விகளை முதன்மைச் செயலாளர் மாலதி, மதுரை சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications