காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறை
ராசிபுரம்: கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு, ராசிபுரம் சார்பு நீதிமன்றம், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரத்தை சேர்ந்தவர் சீமா (25). இவர் கடந்த 2008 ம் ஆண்டு நாமக்கல் அரசுக் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஆறுமுகம் (29), சீமாவை ஒருதலையாக காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளவும் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ஆறுமுகம் சீமாவுக்கு அண்ணன் முறை என்பதால், அவரது காதலுக்கு சீமா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் 2008 ஜனவரி முதல் தேதி அன்று , சீமா, அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆறுமுகம், கையில் மறைத்து வைத்திருந்த சல்ப்யூரிக் ஆசிட்டை (கந்தக அமிலம்) சீமா மீது ஊற்றி விட்டு ஓடி விட்டார்.
இதில் படுகாயமடைந்த சீமாவுக்கு, ஒரு கண்பார்வை போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குண்சேகரன், குற்றவாளி ஆறுமுகத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாக சீமாவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அந்த தொகையை அவரால் செலுத்த இயலவில்லை என்றால், அவரது சொத்துக்களை வருவாய்த் துறையினர் ஜப்தி செய்து, அதை ஏலம் விட்டு, அந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண் சீமாவுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் நிகழ்வு உள்ளிட்டவைகளுக்காக இரக்கம் காட்டி ஆறுமுகம் தண்டனையை குறைக்கக்கூடாது என்றும், 10 ஆண்டு சிறை தண்டனையை ஆறுமுகம் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications