கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil

கோவை மாநகராட்சிக் கூட்டம் இன்று நடந்தது. அப்போது சுயேச்சை கவுன்சிலர் வேல்முருகன் பேசுகையில், கோவையில் உள்ள குளங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புளை அகற்றக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் திடீரென தனது கோரிக்கையை வலியுறுத்தி அவர் தீக்குளிக்க முயன்றதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வேல்முருகனைக் கைது செய்யுமாறு போலீஸாருக்கு மேயர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தால் கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications