நித்யானந்தா வழக்கு-சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

பெங்களூர் அருகே பிடுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தியான பீட சாமியார் நித்யானந்தா மீது செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
தியான பீடத்தின் முன்னாள் ஊழியரும், சிஷ்யருமான நித்ய தர்மானந்தா லெனின் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. பெங்களூரை அடுத்துள்ள ராமநகர் மாவட்டம் பிடுதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக போலீசார் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றும்போது முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்கள் தமிழில் இருந்தன. அதை கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு எதிராக புகார் கொடுத்த நித்ய தர்மானந்தா என்ற லெனினை பிடித்து விசாரிக்க பிடுதி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திகேயன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நித்யானந்தா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில், பொது மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் நல்ல பணியில் ஈடுபட்டுள்ள நித்யானந்தா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை தனித்தனியாக விசாரித்தால் உண்மை வெளியே வராது.
எனவே, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் நியாயம் கிடைக்கும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுபற்றி வருகிற 24ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications