காவிரி முதலில் கால் பதிக்கும் பென்னாகரத்தில் தாண்டவமாடுகிறது வறட்சி - ஜெ. பிரசாரம்

பென்னாகரம் தொகுதியில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் செய்தார். வேனில் அமர்ந்தபடி எழுதி வைத்த உரையை அவர் வாசித்தபடி சென்றார்.
ஜெயலலிதா பேசுகையில்,
இந்த மாவட்ட மக்களின் குறிப்பாக இந்தத் தொகுதி மக்களின் முக்கியமான தேவை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான். இது நாள் வரை இதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.
இதே போன்று அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சுகாதார வசதி, முதலானவற்றையாவது, நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மத்திய ஆட்சியிலும் பங்கு, மாநிலத்திலும் ஆட்சி, உள்ளாட்சி அமைப்புகளிலும் தி.மு.க. தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட உங்களுக்காக எதையும் தி.மு.க. அரசு செய்யவில்லை.
காவேரி ஆறு முதன் முதலில் கால் பதிக்கும் தொகுதியான இந்தப் பென்னாகரம் தொகுதியிலே எங்கு பார்த்தாலும் வறட்சி தாண்டவமாடுகிறது. இந்த தொகுதியைச் சேர்ந்த அனைத்து இடங்களுமே வாடிய மரங்களும், வறண்ட வயல்களுமாகத் தான் காட்சி அளிக்கின்றன.
தி.மு.க. ஆட்சியில் நிர்வாகமாவது நன்றாக நடைபெறுகிறதா என்றால் அதுவும் இல்லை. அனைத்துப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன. சட்டம்-ஒழுங்கு என்பது அறவே இல்லை. தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. இதன் விளைவாக விவசாயம் செய்ய முடியாத அவல நிலை நிலவுகிறது.
உங்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற துணிவில் தி.மு.க.வினர் இருக்கின்றனர். உங்களுடைய பணத்தைத் தான் உங்களிடம் கொடுக்கிறார்கள். எனவே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வாக்குகளை, அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.அன்பழகனுக்கு, இரட்டை இலை சின்னத்தில் செலுத்துங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இரண்டு முறை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தொகுதி மக்களாகிய உங்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. இவருடைய மகனும் தந்தை வழியில் தான் நடப்பார். உங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார். எனவே இவருக்கு ஓட்டளித்து எந்தப் பயனும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை வாக்காளப் பெருமக்களாகிய உங்களது நல் ஆதரவோடு அடுத்த ஆண்டு அ.தி.மு.க. அரசு அமையப் பெற்றதும், உங்களின் முக்கிய கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.
இந்தத் தொகுதி மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நீர் வளத்தைப் பெருக்க நடவடிக்கை எடுப்பேன்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இயக்கமாகவும்; எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற இயக்கமாகவும் அ.தி.மு.க. என்றென்றும் விளங்கும். பாட்டாளி வர்க்கத்தினருக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.
குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடத்தில் தான் இருக்கிறது. இந்த இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளியுங்கள்.
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வாக்களியுங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு! பென்னாகரம் பொன் விளையும் நகரமாக மாற வாக்களியுங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு! ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் தேர்தலாக இந்த இடைத் தேர்தல் அமைய வாக்களியுங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு!
உங்கள் வேட்பாளர் ஆர்.அன்பழகன் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். உங்களையே சுற்றிச் சுற்றி வருவார். உங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும்; உங்களின் முக்கியமான கோரிக்கைகளை வென்றெடுக்கவும், அவர் பாடுபடுவார்.
வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் நடைபெற உள்ள பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து கழக வேட்பாளர் ஆர்.அன்பழகனை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று, உங்களையெல்லாம் அன்போடு, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications