போலி சீல்-நெல்லையில் இறைச்சி பறிமுதல்

நெல்லை மாநகரில் 50க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள் உள்ளன. குறிப்பாக மேலப்பாளையத்தில் மட்டும் 30 கடைகள் இருக்கின்றன.
கடைகளில் வைத்து ஆடுகள் வெட்டப்படும் போது அதில் உள்ள கழிவுகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் மேலப்பாளையத்தில் ஆடறுப்பு மனை அமைக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் இங்கு ஆடுகளை கொண்டு வந்து வெட்டி சீல் வைத்து அதன்பிறகுதான் கடைகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்ய வேண்டும். இங்கு வெட்டப்படும் ஆடுகளுக்கு தலா ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெரும்பாலான வியாபாரிகள் ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லாமல் தங்களது கடைகளிலேயே வெட்டி விடுவதாக புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மேலப்பாளையத்தில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஆசாத் ரோட்டில் உள்ள காசிராஜன் என்பவரது கடையில் ஆடுகள் அங்கேயே அறுக்கப்பட்டு அதில் உள்ள கழிவுகள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டிருந்தன. மேலும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியையும் வியாபாரத்திற்காக வைத்திருந்தனர்
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து கடையை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டனர். இதேபோல் சாயன்தரகன் தெருவில் அப்துல்லா என்பவருக்கு சொந்தமான கடையிலும் சோதனை நடத்தப்பட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. வியாபாரிகள் தங்களது ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லும் போது குத்தகைதாரர்கள் அந்த இறைச்சிக்கு சீல் வைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் ஆடுகளை அங்கு கொண்டு செல்லாமல் கடைகளிலேயே வெட்டி அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக தாங்கள் வைத்துள்ள போலி சீல் மூலம் முத்திரை குத்தி விடுகின்றனர்.
இன்று நடந்த சோதனையில் காசிராஜன், அப்துல்லா ஆகியோர் கடைகளில் இருந்த போலி சீல் மற்றும் பேடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications