நுகர்வோர் நீதிமன்றத்தில் 8,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன
மதுரை: தமிழகத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் சுமார் 8 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் நுகர்வோர் நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை நுகர்வோர் ஆணைய தலைவர் தணிகாசலம் பார்வையிட்டார். அதன் பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
'தமிழகத்தில் 35 நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. இதில் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு உட்பட ஐந்து மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு மட்டுமே கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மற்ற மாவட்டங்களில் கட்டட வசதி, கழிவறை வசதி கூட இல்லை. இதனால், நுகர்வோர் நீதி மன்றத்தின் தலைவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மதுரையில் நுகர்வோர் சர்க்கியூட் பெஞ்ச் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், மாநில அளவில் 35 நுகர்வோர் நீதி மன்றங்களில் சுமார் 8,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவற்றை விரைந்து பைசல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications