12,000 விவசாயிகளுடன் பெப்ஸி ஒப்பந்தம்!
கொல்கத்தா: லேஸ், அங்கிஸ் சிப்ஸ் போன்ற தங்களின் தயாரிப்புகள் சந்தையில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து உருளைக்கிழங்கு விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பெப்ஸிகோ நிறுவனம்.
இதற்கென நாடு முழுவதும் 16000 ஏக்கர் பரப்பளவில், 12000 விவசாயிகளிடம் ஒப்பந்த முறை விவசாயம் நடத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இத்தகவலை பெப்ஸிகோ ஹோஸ்டிங்ஸ் (வேளாண்மை வர்த்தகம்) நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் நிஸ்சிந்த் பாட்டியா தெரிவித்துள்ளார்.
இந்த 12000 விவசாயிகளில் 6500 பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். 2600 ஏக்கர் இவர்கள் வசமுள்ளது.
கடந்த சீஸனில் மட்டும் 22000 டன் உருளைக் கிழங்கை பெப்ஸிகோ ஒப்பந்த முறை விவசாயிகள் விளைவித்துள்ளனர். இந்த விளைச்சல் அடுத்த பருவத்தில் இரட்டிப்பாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாட்டியா.
இப்போதைக்கு உருளைக்கிழங்கு மட்டும் இந்த ஒப்பந்த முறை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டாலும், விரைவில் ஓட்ஸ் போன்ற பிற வகை தானியங்களும் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
விவசாயிகளிடம் உருளைக் கிழங்கு கிலோ ரூ 6 என வாங்குகிறது பெப்ஸிகோ. 'நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச கொள்முதல் விலை' என்கிறார் பாட்டியா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications