இந்திய ராணுவத்தில் மிளகாய் குண்டு அறிமுகம் செய்ய முடிவு

மிளகாயைக் கொண்டு குண்டுகளைத் தயாரிக்க பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளதாம். இதுதொடர்பாக விஞ்ஞானிகளுடன் ஆய்வையும் அது தொடங்கவுள்ளது.
கையெறி குண்டுகளில் மிளகாயைக் கலந்து அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்த பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை, பெரும் கலவரம், கலகம் போன்ற சம்பவங்களின்போது இந்த மிளகாய் குண்டு பயன்படுத்தப்படுமாம்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இதுகுறித்து டிஆர்டிஓ விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இதுதொடர்பான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பூட் ஜோலகியா என்ற வகை மிளகாயைக் கொண்டு இந்த குண்டு தயாரிக்கப்படும் என்றார்.
டிஆர்டிஓவின் உயிரி அறிவியல் துறை இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான ஆர்.பி.ஸ்ரீவத்சவா கூறுகையில், இதுகுறித்து சோதனை ரீதியில் சிலவற்றை நாங்கள் செய்து பார்த்துள்ளோம். அது திருப்திகரமாக இருந்துள்ளது என்றார்.
பூட் ஜோலகியா என்பது கேப்சிகம் சைனீஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிளகாய் ஆகும். இது அஸ்ஸாமைச் சேர்ந்தது.
இதன் கார அளவு 10,01,304 ஸ்காவி்லி யூனிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மெக்சிகோவின் ரெட் சாவினா மிளகாயை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்த மிளகாய் குண்டு குறித்த ஆய்வுகள் பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்களில் நடந்து வருகிறதாம். மிகச் சிறந்த முறையில் மிகக் கடுமையான காரத்துடன் கூடியதாக இந்த குண்டு இருக்குமாம்.
இந்தக் குண்டு வெடித்துச் சிதறும்போது எதிரிக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். உயிர் போகாது, அதேசமயம், அவனால் செயல்படவே முடியாத அளவுக்கு முடக்கிப் போட்டு விடும் என்கிறார்கள் பாதுகாப்புத்துறையினர்.
இதே பூட் ஜோலகியாவை கண்ணீர்ப் புகை குண்டுகளிலும் தடவி கலவரத்தை அடக்கும் யோசனையும் பாதுகாப்புத்துறையிடம் உள்ளதாம். இதற்காக பேஸ்ட் வடிவிலும், பவுடர் வடிவிலும் இதைத் தயாரிக்கும் திட்டம் உள்ளதாம்.
இது மட்டுமல்லாமல் உயரமான பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு உடலில் உஷ்ணம் குறைந்து விடாமல் தடுக்க இந்த மிளகாயை அவர்களது உணவில் சேர்ப்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறதாம்.
தற்போது ஒரு கிலோ பூட் ஜோலக்கியாவின் விலை ரூ. 250 என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications