அமைச்சர் ஐ. பெரியசாமி பாதுகாவலர் மீது பெண் போலீஸ் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமியின் பாதுகாவலர் உதயசூரியன் தன்னை ஏமாற்றிவிட்டதாக திண்டுக்கல் எஸ்.பி. முத்துசாமியிடம் பெண் போலீஸ் ஒருவர் புகார் கொடுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டியைச் சேர்ந்தவர் உதயசூரியன்(25). இவர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார்.

இவருக்கும், வேலூர் ஆயுதப்படையில் பெண் போலீசாக உள்ள கனி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கனி ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். இவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உண்டு.

அமைச்சரின் பாதுகாவலர் உதயசூரியனும், பெண் காவலர் கனியும் இரண்டு ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், உதய சூரியனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனை அறிந்த பெண் போலீஸ் கனி, திண்டுக்கல் எஸ்.பி. முத்துசாமியிடம் கொடுத்துள்ள புகாரில், காவலர் உதயசூரியன், என்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, என்னை ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கின்றார்.

எனவே, எனக்கு நியாம் வழங்க வேண்டும் என்றுப புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி முத்துசாமி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+