அமெரிக்க ராணுவத்தினருக்கு பின்லேடன் புது எச்சரிக்கை

இதுதொடர்பான ஆடியோ ஒன்றை அல் ஜசீரா டிவி ஒலிபரப்பியுள்ளது. அதில் பேசியுள்ள குரல் கூறியுள்ளதாவது...
முகம்மது உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தால், அதன் பின்னர் நாங்கள் பிடிக்கும் ஒவ்வொரு அமெரிக்க வீர்ருக்கும் அதே கதிதான் ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம்.
தனக்கு முன்பு இருந்த ஜனாதிபதியைப் போலவே இப்போதைய ஜனாதிபதி ஒபாமாவும் நடந்து கொள்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
நீதிக்குப் புறம்பாகவே வெள்ளை மாளிகை அரசியல்வாதிகள் நடந்து வருகிறார்கள். இன்னும் அவர்கள் மாறவில்லை. குறிப்பாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நடந்து வருகின்றனர்.
ஆனால் கடவுளின் உதவியோடு நாங்கள் நியூயார்க்கில் வெற்றிகரமான தாக்குதலை நடத்திய பின்னர்தான் தாங்கள் முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
டேப்பில் கூறப்பட்டுள்ள முகம்மது உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை அல் கொய்தா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், முகம்மது உள்ளிட்டோர் விசாரணையின்போது சித்திரவதைக்கள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அதிபர் ஒபாமா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து இந்த வழக்கு நியூயார்க் சிவில் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒபாமா அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
பின்லேடனிடமிருந்து கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆடியோ டேப் வெளியாகியிருந்த்து. தற்போது இன்னொரு ஆடியோ வெளியாகியுள்ளது. ஆனால் பின்லேடன் தோன்றுவது போன்ற ஒரு வீடியோ கூட கடந்த சில வருடங்களாகவே வெளியாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்ச மாட்டோம்-அமெரிக்கா:
அல் கொய்தாவின் இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், அல்-கொய்தா வெறுப்பைத் தவிர வேறு எதையும் பரப்பவில்லை. அமெரிக்கா தொடர்ந்து அல் கொய்தா பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் என்றார்.
அல் கொய்தாவின் மார்பு குண்டு...
இதற்கிடையே, அறுவைச் சிகிச்சை மூலம் நெஞ்சுப் பகுதியில் வெடிகுண்டைப் புதைத்து வைத்து விமானத்தில் பயணித்து அதை வெடிக்கச் செய்யும் புதிய சதித் திட்டத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் தீட்டியிருக்கும் பயங்கர தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட பெண்களை அவர்கள் தேர்வு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
பெண் தீவிரவாதிகள் மார்பில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் குண்டுகளை புதைத்து வைத்து விமானங்களில் தாக்குதல் நடத்த செய்வது அவர்களது முக்கிய திட்டமாகும்.
அல்கொய்தா இயக்கத்தில் பல டாக்டர்களும் இருக்கின்றனர். பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் கிராமங்களில் உள்ள அல்கொய்தா முகாமில் இருக்கும் இந்த டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் மார்பில் குண்டுகளை புதைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
மார்பு அல்லது பின் சதை பகுதியில் 5 அவுன்சு உள்ள வெடி மருந்தை பிளாஸ்டிக் குப்பியில் அடைத்து புதைத்து வைத்து விடலாம். இதை ஸ்கேனர் கருவிகளால் கண்டு பிடிக்க முடியாது.
விமானத்தில் செல்லும் போது இந்த குண்டை வெடிக்க செய்தால் விமானத்தில் ஓட்டை விழும் அளவுக்கு தாக்கும் சக்தி இருக்கும். ஓட்டை விழுந்தால் மேற்கொண்டு விமானம் பறக்க முடியாமல் கீழே விழுந்து விடும்.
ஏற்கனவே மலக்குழாயில் வெடிகுண்டுகளை புதைத்து எடுத்துச் செல்லும் திட்டத்துடன் அல் கொய்தாவினர் இருந்த தகவல் முன்பு வெளியாகியிருந்த்து குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தற்போது மார்பு குண்டு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications