மைக்கில் ஆபாசமாக பேசிய பெண் டிஎஸ்பியை முற்றுகையிட்ட கிராமமக்கள்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரம் தொகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் வெளியூர் ஆட்கள் யாராவது தங்கியுள்ளனரா என்று போலீசார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பதட்டத்தை தணிக்கும் வகையில் பொது இடங்களில் கூட்டம் போடாமல் இருக்கவும் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தினார்கள்.
பென்னாகரம் போலீஸ் டி.எஸ்.பி பஞ்சவர்ணம். போலீசாருடன் ரோந்து சென்றார். கூட்டமாக இருக்கும் மக்களை கலைந்து போகுமாறு பைக்கில் சொன்னார்.
இரவு 9 மணியளவில் கூத்தப்பாடி என்ற கிராமத்துக்கு சென்றார். அப்போது ரோட்டின் ஒரு புறத்தில் பெண்களும், ஆண்களும் உட்கார்ந்து இருந்தனர்.
அப்போது டிஎஸ்பி பஞ்சவர்ணம் ஒலிபெருக்கி மூலம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. டிஎஸ்பியின் பேச்சினால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தையும் முற்றுகையிட்டனர்.
சுமார் 1 ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் டிஎஸ்பி பஞ்சவர்ணத்தை சூழ்ந்து கொண்டதால் அவரால் வெளியே செல்ல முடியவில்லை.
இதையடுத்து அவர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பென்னாகரம் தேர்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள கோவை காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் கூத்தப்பாடிக்கு விரைந்து வந்தார்.
ஆபாசமாக பேசிய டிஎஸ்பி பஞ்சவர்ணம் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னரே கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications