அங்கீகாரம் ரத்து - சென்னை மீனாட்சி ப்லகலைக்கழக மாணவர்கள் போராட்டம்- வன்முறை
சென்னை: அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து வகுப்பறைகளை மாணவர்கள் அடித்து சூறையாடினர்.
சென்னை அருகே உள்ள மாங்காடுக்கு அருகே சிக்கராயபுரத்தில் மீனாட்சி பல்கலைக்கழகம் என்ற தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பி.இ., எம்.பி.ஏ., ஐ.டி. உள்ளிட்ட பாட பிரிவுகளில் சுமார் 1,500 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களிடையே கொந்தளிப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரும்பு கம்பிகள் மற்றும் கற்களால் வகுப்பறைகளின் கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். பின்னர் ஆய்வுக்கூடத்துக்கு சென்று அங்கும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.
அங்கு 2-வது ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத இடையூறு செய்கிறார்களே என கருதி முதலாம் ஆண்டு மாணவர்களை விரட்டியடித்தனர்.
இதனால் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் துரைபாண்டி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications