போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நக்சல் தலைவர் கிஷன்ஜி படுகாயம் -பலியானதாகவும் தகவல்
கொல்கத்தா: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளாக தகவல்கள் கூறுகின்றன. அவர் ஒரு வேளை இறந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லால்கர் அருகே கிஷன்ஜி உள்ளிட்ட நக்சலைட் தலைவர்கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் கடும் தாக்குதலில் இறங்கினர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின் போது கிஷன்ஜி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் இறந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு மிதினாப்பூர் மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோடீஸ்வரராவ் எனப்படும் கிஷன்ஜி மிகவும் மோசமான காயத்தை அடைந்திருப்பதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. லகான்பூர் கிராமத்திற்கு அருகே ஹதிஷோல் என்ற வனப்பகுதியில் இந்த சண்டை நடந்தது.
மொத்தம் 15 மாவோயிஸ்டுகள் இதில் கொல்லப்பட்டுள்ளனர். கிஷன்ஜியின் காலில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் இறந்து விட்டதாகக் கூட ஒரு செய்தி கிடைத்துள்ளது. இருப்பினும் இதுவரை எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றார்.
கிஷன்ஜி என மாவோயிஸ்டுகள் மத்தியில் அழைக்கப்படும் கோடீஸ்வரராவ், மாவோயிஸ்ட் அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினராகவும், மத்திய படைப் பிரிவின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்தான் கிழக்குப் பிராந்திய மாவோயிஸ்ட் பிரிவின் தலைமைப் பொறுப்பையும் வகித்து வருகிறார்.
இவரைக் குறி வைத்துத்தான் தற்போது பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications