போர் முனையில் பிரபாகரன் - பொட்டுவை விரைவில் பார்க்கலாம்! - வைகோ
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது தளபதி பொட்டு அம்மானையும் விரைவில் போர்முனையில் பார்க்கலாம் என்றார் வைகோ.
பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
தமிழகத்திலே 7 1/2 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே அரசு சுட்டுக் கொன்றதை இங்குள்ள தமிழர்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.
இலங்கை தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரி நான் பிரதமர் மன்மோகன்சிங்கை 16 முறை சந்தித்து முறையிட்டேன். இருந்தும் பயனில்லை. இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவி செய்தது. தமிழர்களை அழிக்க உறுதுணையாய் நின்றது.
இலங்கையிலே விடுதலைப் புலிகளின் இறுதிப்போர் ஓய்ந்து விட்டதாக ராஜபக்சே நினைக்கிறார். விரைவில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும். பிரபாகரனும், பொட்டுஅம்மானும் போர் முனையில் நிற்பார்கள். நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலை தொடர்ந்தால் ஜன நாயகம் சீரழிந்து விடும். ஆட்சியின்மேல் அதிகாரிகள் மேல் நம்பிக்கை இழந்துவிடும் பிற்கால இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறி விடும் அபாய சூழ்நிலை உருவாகிவிடும்..." என்றார் வைகோ.
மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எழிலரசன், நகர செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications