நித்யானந்தா விவகாரம்-குழம்பிப்போன விவேக் ஓபராய்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விவேக் ஓபராய், செக்ஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள நித்யானந்தாவின் தீவிர பக்தர்.
முதன்முதலில் கடந்த 2005ம் ஆண்டு தனது அத்தையின் மூலம் நித்யானந்தாவின் அறிமுகம் இவருக்கு கிடைத்ததாம்.
நித்யானந்தாவை நேரில் பார்த்து, சிறிது நேரம் பேசிய உடனேயே அவர் மீது ஓபராய்க்கு பெரிய மரியாதையும் பக்தியும் வந்துவிட்டதாம்.
இந்த சிறிய வயதில் இவ்வளவு அறிவு முதிர்ச்சியுடன், ஒரு குருவுக்கு உரிய அத்தனை லட்சணங்களையும் நித்யானந்தா கொண்டிருப்பதை பார்த்து ஓபராய் அசந்து போயுள்ளார்.
அதன் பிறகு அடிக்கடி தொலைபேசியிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் ஓபராயும், நித்யானந்தாவும் தகவல்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.
பல்வேறு விவகாரங்களுக்கு விவேக் ஓபராய் நித்யானந்தாவின் அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்பார்த்துள்ளார்.
இவ்வாறு குரு- சிஷ்யர் உறவு ஆரோக்கியமாக வளர்ந்து வந்த சமயத்தில் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறைக் காட்சி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதை கண்டு ஓபராய் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போயுள்ளார்.
நித்யானந்தா மீதான புகார்கள் பற்றி அவரிடம் கேட்டபோது,
'நி்த்யானந்தாவை பார்த்து, பேசி நான் ஆச்சரியப்பட்டதுண்டு. அவரை நான் குருவாக ஏற்றுக்கொண்டது உண்மை தான்.
ஆனால் அவரை இரண்டு முறை தான் நான் நேரில் சந்தித்தேன். பெங்களூரில் உள்ள அவரின் ஆசிரமத்தில் நல்ல ஆன்மிக அனுபவங்களையும் பெற்றுள்ளேன்.
ஆனால் இப்போது வெளியாகும் புகார்கள் என்னை குழப்பமடையச் செய்துள்ளன. எல்லோரையும் போல இவற்றை கேள்விப்பட்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன்.
உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி பலரும் பல விதமாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். நிஜம் எது என்பது முழுமையாக வெளிப்படாத வரை நான் இவ்விஷயத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை' என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications