For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 முதல் 8.5% பொருளாதார வளர்ச்சியை எட்டலாம்- ரங்கராஜன் நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

C Rangarajan
அகமதாபாத்: அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எட்டு முதல் எட்டரை சதவீத அளவுக்குள் இருக்கும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவர் சி.ரங்கராஜன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த ஐஐஎம் நிறுவனத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக உணவுப் பொருள் விலையில் குறைவு காணப்படுகிறது. ரபி பருவ விளைச்சல் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. இது உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைக்க உதவும் என நம்புகிறேன்.

இருப்பினும் அடுத்த 2 மாதங்களுக்கு ஒட்டுமொத்த பண வீக்கம் தொடர்ந்து உயர்வு முகமாகவே இருக்கும்.

அதேசமயம், அடுத்த நிதியாண்டில் நம்மால் எட்டு முதல் எட்டரை சதவீத அளவுக்குள்ளான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியம் என்றார் ரங்கராஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X