பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்தம்பித்தது... பயணிகள் கோபம்!
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான பணியாளர்களின் 4 நாள் வேலை நிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விமானங்களையுமே நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நிர்வாகம்.
இதனால் பல ஆயிரம் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் 6 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் ஏற்றப்பட்ட பயணிகள் கடைசி நேரத்தில் இறக்கப்பட்டனர். காரணம் பணியாளர்கள் இல்லாததே.
உலகின் பல விமான நிலையங்களிலும் 70 சதவிகித தொலைதூர விமானங்களும், 55 சதவிகித குறுகிய தூர விமானங்களையும் ரத்து செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது நிர்வாகம். நாளை இன்னும் கூட கூடுதலாக விமானங்கள் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
சரியாக வார இறுதி நாளில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ட்ரைக் என்பதால் பயணிகள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். பல விமான நிலையங்களில் பயணிகளுக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
விமான ஊழியர்களின் இந்த ஸ்ட்ரைக்கை கண்டித்துள்ளார் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த பத்து வருடங்களுக்குக் கூட இந்த நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடும் என்றார் அவர்.
சம்பள பிரச்சினைகளைச் சரிசெய்யக் கோரி ஏற்கெனவே கடந்த வாரம் இந்நிறுவனத்தின் 12000 விமான பணியாளர்கள் 3 நாட்கள் ஸ்ட்ரைக் நடத்தினர். இந்த ஸ்ட்ரைக் நடந்து 5 நாட்களுக்குள் மீண்டும் 4 நாட்கள் ஸ்ட்ரைக் மேற்கொண்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications