விசா மோசடி: முன்னாள் அமைச்சரின் மகனுக்கு போலீஸ் வலை!
கடையநல்லூர்: கடையநல்லூரில் வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா விசா வழங்கி வாலிபரிடம் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மகன் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மாவடிக்கால் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் நாகராஜன்.
இவர் கடந்த 2005ம் ஆண்டு வெளிநாடு செல்வதற்கு கடையநல்லூரில் டிரவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த, மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.ஏ.மஜீதின் மகன் பசூருதின், நிறுவன பங்குதாரர் இப்ராஹூம் ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தார்.
தென்ஆப்பிரிக்கா செல்தவற்காக அவர்கள் நாகராஜனிடம் விசா கொடுத்தனர். அதன் மூலம் நாகராஜன் வேலைக்காக தென் ஆப்பிரிக்கா சென்றார்.
ஆனால் அங்கு சென்ற பிறகு, பசூருதின் சுற்றுலா விசா கொடுத்து தன்னை ஏமாற்றிய விபரம் தெரிய வந்தது. இதையடுத்து பல சிரமங்களை சந்தித்து நாகராஜன் மீண்டும் கடையநல்லூர் திரும்பினார்.
சுற்றுலா விசா கொடுத்து தன்னை ஏமாற்றிய பசூருதின், இப்ராஹூம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி கடையநல்லூர் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications