பிரிட்டனின் நம்பர் ஒன் பணக்கார ஆசியர் லட்சுமி மிட்டல்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் ஆசியர்களில் 2010-ம் ஆண்டின் நம்பர் ஒன் பணக்காரராக இந்தியாவின் லட்சுமி மிட்டல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

1 லட்சத்து 19 ஆயிரம் கோடி சொத்துக்கள் மதிப்புடன் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக 'ஏசியன் மீடியா மற்றும் மார்க்கெட்டிங் குரூப்' என்ற நிறுவனத்தின் ஈஸ்டர்ன் ஐ பத்திரிகை நடத்திய 2010-ம் ஆண்டுக்கான கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. லட்சுமி மிட்டல், உலகின் மிகப்பெரிய இரும்பு எஃகு நிறுவனமான ஆர்செலார் மிட்டலின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக இந்துஜா சகோதரர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2-வது இடத்தில் உள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 56 ஆயிரம் கோடி ஆகும்.

சுமார் 28 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் வேதாந்தா ரிஸோர்ஸஸ் நிறுவனத்தின் அனில் அகர்வால் 3-வது இடம் பிடித்து உள்ளார்.

லண்டனின் ஸோபிடெல் ஹோட்டலில் இந்த பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது இந்துஜா சகோதரர்களுக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்ததற்காக வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+