ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைகிறது - மதக் கலவரத்தால் பதட்டம்

தொடர் போராட்டங்களால் ஹைதராபாத் நகரில் இயல்பு நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் தெலுங்கானா போராட்டங்களால் ஏற்கனவே ரணகளப்பட்டுக் கிடக்கும் ஹைதாரபாத்தில் தற்போது புதிதாக மதக் கலவரம் வெடித்துள்ளது.
கோஷாமஹால் பகுதிக்குட்பட்ட நான்கு இடங்களில் இரு பிரிவினருக்கிடையே கடும் மோதல் வெடித்தது. கல்வீச்சு உள்ளிட்ட மோதலில் 36 பேர் காயமடைந்தனர். இந்த மோதல்கள் தொடர்பாக இரு பிரிவையும் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தெற்கு மண்டலத்தில் 18 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில், 4 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலைமை தற்போது கட்டுக்குள் இருந்தாலும் தொர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு ஆயிரம் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ரோசய்யா சட்டசபையில் கூறுகையில், தொடர்ந்து நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுகுறித்து மத்திய அரசுடனும் பேசியுள்ளோம். மத்திய அரசு 10 கம்பெனி புற ராணுவப் படையினரை அனுப்பி வைத்துள்ளது.
அமைதியை நீடிக்கச் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அனைத்துத் தரப்பினரும் பொறுமையும், அமைதியும் காக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் தொடர்புக கொண்டு என்னுடன் பேசி நிலைமையைக் கேட்டறிந்தார் என்றார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில காவல்துறை அமைச்சர் சபீதா ரெட்டி நேரில் பார்வையிட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் சட்டசபையில் வெடித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மோதல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு சபாநாயகர் கிரண் குமார் ரெட்டி அனுமதி மறுத்தார்.
இருப்பினும், மஜ்லிஸ் இதாஹுல் இ முஸ்லிமீன் கட்சி உறுப்பினர்கள் கண்டிப்பாக விவாதம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அக்கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைசி கூறுகையில், ஹைதராபாத் பழைய பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. மாணவர்கள் தேர்வு எழுதச் செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. எனவே அரசு தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும். போதிய அளவில் போலீஸ் படையினரை குவிக்க வேண்டும் என்றார்.
கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தின் முசாபெளலி பகுதியில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் விழா தொடர்பான பேனர்களை கட்டி வைத்திருந்தனர். அதை இன்னொரு பிரிவினர் அகற்றியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது.
இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் கலவரம் பரவியதால் பதட்டம் கூடியது. தற்போது ஹைதராபாத்தில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications