தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து நித்தியானந்தா விலகல்
பெங்களூர்: தனது தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா உல்லாசத்தில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார்.
இதுவரை 3 முறை வீடியோவில் தோன்றி பேசியுள்ள நித்யானந்தா இப்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார்.
அதில், தியான பீட பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார் நித்யானந்தா.
வீடியோவில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:
நித்யானந்தா தலைமை தியான பீடத்தில் இருந்தும், அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். தியான பீடம் எப்போதும் போல தொடர்ந்து செயல்படுவதற்கு வசதியாக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். தொடர்ந்து அமைதி வழியில் எனது ஆன்மீக பணியை மேற்கொள்ள உள்ளேன்.
இதற்காக இமயமலைக்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளேன். புதிதாக வரும் ஆசிரம நிர்வாகிக்கும் சீடர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இதுவரையில் எனக்கு ஆதரவு அளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் இப்போதைக்கு அவர் பெங்களூர் பக்கமே வர மாட்டார் என்று தெரிகிறது.
அவர் மீது தமிழகத்திலும் பெங்களூரிலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலையில், முன் ஜாமீன் கேட்டு நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த ஒரு மாதமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்யானந்தா இப்போது இமயமலைப் பக்கம் போவதாய் அறிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications