அதிமுகவில் உண்மையான தொண்டர்களே இல்லை-எஸ்.வி.சேகர்
சென்னை: அதிமுகவில் உண்மையான தொண்டர்களே இல்லை என்று அக் கட்சியிலிருந்து விலகிய எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. திமுகவினரின் கடுமையான உழைப்பின் பலன்தான் பென்னாகரம் இடைத் தேர்தல் வெற்றி.
வழக்கமாகவே ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார். அதிமுகவினரும் அவர் இருக்கும் வரை பரபரப்பாக செயல்படுவார்கள். அவர் திரும்ப ஹெலிகாப்டரில் ஏறியவுடன் அமைதியாகிவிடுவார்கள். அதைத் தான் பென்னாகரத்திலும் செய்துள்ளனர்.
அதிமுகவில் உண்மையான தொண்டர்களே இல்லை. அவர்கள் எல்லாம் திமுகவுக்கு வந்துவிட்டனர். எந்த விசுவாசமும் இல்லாத அதிமுகவினரை வைத்துக் கொண்டு தான் பிரச்சாரம் செய்தார ஜெயலலிதா என்றார் சேகர்.
சொந்த ஊரிலேலே பின்தங்கிய அதிமுக வேட்பாளர்:
பென்னாகரத்தல் அதிமுக வேட்பாளர் அன்பழகன் தனது சொந்த ஊரான தாளப்பள்ளத்திலேயே குறைந்த ஓட்டுக்கள் வாங்கி பின் தங்கியுள்ளார்.
8வது சுற்றில் தாளப்பள்ளத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டபோது திமுகவுக்கு 360 ஓட்டுகளும், பாமகவுக்கு 310 ஓட்டுகளும் கிடைத்தன. ஆனால் அதிமுகவுக்கு 216 ஓட்டுகளே கிடைத்தன.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications