தேசிய ஆலோசனை குழு தலைவராக மீண்டும் சோனியா
டெல்லி: தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மீண்டும் நியமித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
எம்பியாக இருந்து கொண்டே ஆதாயம் தரும் இந்தப் பதவியையும் வகித்த சர்ச்சை காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இப் பதவியில் இருந்து சோனியா விலகினார்.
மேலும் தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தனது ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இந் நிலையில் மீண்டும் இப்போது தேசிய ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைப் பெறுகிறார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தேசிய ஆலோசனைக் குழுவின் பிற உறுப்பினர்கள் கோரியபடி சோனியா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓராண்டுக்கு இப்பதவியை வகிப்பார். குழு உறுப்பினர்கள் விரும்பினால் தலைவரின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும்.
இந்தப் பதவியை அவர் வகித்தாலும் இதற்கான அலவன்ஸ் உள்ளிட்ட பயன்களை அவர் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தை செயல்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கியப் பணியாகும்.
முதல்வர் வாழ்த்து:
தேசிய ஆலாசனைக் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் பதவியில் தங்களின் சிறப்பான சேவை மூலம் நாடு அதிலும் குறிப்பாக ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் நன்கு பயனடைவார்கள். இந்த நியமனத்தின் மூலம் இந்த பதவிக்கு புதிய பரிமாணங்கள் கிடைக்கும். தங்களுடைய சேவை மனப்பான்மைக்கு இந்த நியமனம் மேலும் ஒரு சிறப்பாக அமையும்.
தங்களுக்கு இந்த பதவி மகிழ்வாகவும், பயனுள்ளதாகவும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications