திமுக தலைவர் யார் என்பதை தனி நபர் எவரும் தீர்மானிக்க முடியாது - கருணாநிதி

சமீபத்தில் முதல்வர் கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி, பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எனக்கு கருணாநிதி மட்டும்தான் தலைவர். அவருக்குப் பின் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன். கருணாநிதியின் இடத்தை வகிக்க திமுகவில் யாருக்கும் தகுதி கிடையாது என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் முன் அழகிரி இவ்வாறு கூறிவிட்டுக் கிளம்பிப் போனார்.
இதனால் திமுகவில் வாரிசுப் போர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் பேட்டி வெளியான அன்றே செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அதை அவரிடமே கேளுங்கள் என்று பதிலளித்தார்.
இந் நிலையில் தற்போது விரிவாக பதிலளித்துள்ளார் கருணாநிதி. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுகவின் தலைவரை ஒரு தனி மனிதர் தீர்மானித்து விட முடியாது. எனக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது. கட்சி மட்டுமே தலைவர் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.
அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே எந்தவிதமான விரிசலும் இல்லை. அப்படி இருந்தால் அது என்னை பாதிக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications