ஐந்து நாள் தொடர் விடுமுறை- ஏப். 5ல் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் ஏப்ரல் 5ம் தேதிதான் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாதாமாதம் கடைசி நாள் அல்லது அடுத்த மாத்த்தின் முதல் நாளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வரும். ஆனால் மார்ச் மாத சம்பளம் மட்டும் பெரும்பாலும் தள்ளிப் போகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதக் கடைசி நாளான 31ம் தேதி வங்கி ஆண்டு இறுதிக் கணக்கு முடிக்கும் நாள் என்பதால் விடுமுறை. இன்றும் விடுமுறைதான். நாளை புனித வெள்ளி என்பதால் விடுமுறையாகும். அடுத்து சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விடுமுறை தினங்களாகும்.

எனவே இந்த ஆண்டு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையாகி விட்டது. எனவே ஏப்ரல் 5ம் தேதிதான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவுள்ளது.

வங்கிகளைப் பொறுத்தவரை மார்ச் 31, ஏப்ரல் 1, 3, 4 ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஏடிஎம் மையங்களில் பணம் விரைவில் காலியாகி விட வாய்ப்புள்ளதால் பணம் எடுக்க பெரும் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்த்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+