மும்பை கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா?- தேடுதல் வேட்டை!
டெல்லி: மும்பை கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் படகு ஒன்று சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் நடந்தது போல, படகில் தீவிரவாதிகள் வந்திருப்பார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
டையூ கடல் பகுதிக்கு அப்பால் தென்பட்ட அந்த மர்ம படகை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுபற்றி சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
'மும்பை கடல் பகுதியில் 'அல் சலாம்' என்ற பெயரில் சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்று கடந்த திங்கள் கிழமை சென்று கொண்டிருந்ததாக மீனவர்கள் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார்கள்.
வெள்ளை நிறத்தில் இருந்ததாக கூறப்படும் அந்த படகை, டையூ அருகே பார்த்ததாக மீனவர்கள் தெரிவித்தார்கள். படகில் ஐந்து பேர் இருந்திருக்கிறார்கள். மீனவர்களிடம் வழி கேட்டிருக்கிறார்கள்.
அவர்கள் படகில் எழுதியிருந்த பெயர் மற்றும் பதிவு எண் ஆகியவற்றையும் மீனவர்கள் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அந்த பெயரும், பதிவு எண்ணும் போலியானவை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த படகு எங்கு சென்றது என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி, தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்' என்றார்.












Click it and Unblock the Notifications