மேட்டுப்பாளையம் அருகே மணல் லாரி ஜீப்புடன் மோதியதில் 5 பேர் பலி
மேட்டுப்பாளையம்: மணல் லாரி ஜீப் மீது மோதியதில், ஜீப் கவிழ்ந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், கோத்திரவயல், பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற சாமி (40). ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். ரவியின் மகள் சரண்யா (18). இவருக்கு கோவை அருகே நீலாம்பூரில், தனியார் மில்லில் வேலை கிடைத்து இருந்தது.
மகளை வேலையில் சேர்த்து விடுவதற்காக, ரவி ஒரு ஜீப்பை வாடகைக்கு பிடித்துக் கொண்டு குடும்பத்தினருடன் நீலாம்பூரை நோக்கி வந்து கொண்டு இருந்தார். வழியில் குன்னூரில் உள்ள தங்கை சாந்தி மற்றும் நண்பர் ஒளிவிளக்கு ரவி ஆகியோரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டார்.
காலை 11.30 மணி அளவில் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின்ரோட்டில் குமரன்குன்று தாளத்துறை பிரிவில் ஜீப் வந்து கொண்டு இருந்தது. அப்போது கரூரில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு காரமடையை நோக்கி சென்று கொண்டு இருந்த ஒரு லாரி, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஜீப் ரோட்டோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் ஜீப் மீது மணல் லாரியும் விழுந்து அழுத்தியது. லாரி மோதி விபத்து ஏற்பட்டதாலும், லாரி விழுந்து அழுத்தியதாலும் ஜீப் சுக்குநூறாக நொறுங்கியது.
ஜீப்பில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரவியின் மனைவி சாந்தி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தில் ரவி, தங்கை சாந்தி, மகள் சரண்யா, ஜீப் டிரைவர் ராஜேந்திரன், ஒளிவிளக்கு ரவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications