சொத்துக் குவிப்பு வழக்கு- பீகார் அரசின் அப்பீல் செல்லாது - லாலுவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்

லாலு மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் மீது சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு சிபிஐ கோர்ட், அதைத் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், இதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில், பீகார் அரசு அப்பீல் செய்தது. இதையடுத்து லாலு, ராப்ரி தேவி மற்றும் சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் லாலு கூறுகையில், அப்பீல் செய்யும் அதிகாரம் பீகார் அரசுக்கு இல்லை என்று கூறியிருந்தார்.
இதை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் லோதா, செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பீகார் அரசின் அப்பீல் செல்லாது என்று கூறி தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், இந்த வழக்கில் அப்பீல் செய்யும் அதிகாரம் பீகார் அரசுக்கு இல்லை என்று உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் லாலு பெரும் நிம்மதி அடைந்துள்ளார். .தீர்ப்பு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications