டிஎன்பிஎஸ்சி குரூப்2: ஹால் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு டூப்ளிகேட் ஹால் டிக்கெட்டுக்கு ஏற்பாடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுக்கு விண்ணப்பித்து 7ம் தேதி வரை ஹால் டிக்கெட் பெறாதவர்கள் மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று டூப்ளிகேட் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு வரும் 11ம் தேதி காலை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 104 மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மைய விவரமும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம் பற்றிய விவரமும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான குறிப்பாணையும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்து 7ம் தேதி வரை ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்களுக்கு 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை டூப்ளிகேட் ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர்கள் அரசினர் தோட்டத்தில் உள்ள பழைய எம்எல்ஏ விடுதியில் செயல்பட்டு வரும் டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட வருவாய் அதிகாரி (டிஆர்ஓ) அலுவலகத்தை அணுகி பெறலாம்.
டூப்ளிகேட் ஹால் டிக்கெட் பெற விரும்புவோர் ஒரு கோரிக்கை கடிதத்துடன் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரங்களுடன், வெள்ளைத்தாளில் தங்கள் பாஸ்போர்ட் அளவு போட்டோவை ஒட்டி அதில் குரூப்-ஏ அல்லது குரூப்-பி அதிகாரியின் சான்றொப்பம் பெற்று கொடுக்க வேண்டும்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஆணையை மறுபரிசீலனை செய்வது, பாடங்கள், தேர்வு மையம், முகவரி மாற்றம் தொடர்பான கோரிக்கை ஏற்கப்படாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications