அதிமுக தோல்வி – விஷமருந்திய தொண்டர் பலி – ஜெ. வேதனை
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தல் தோல்வியால் வேதனை அடைந்த அதிமுக தொண்டர் ஒருவர் வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தேர்தல் தோல்வியால் மனம் உடைந்து உயிரை மாய்க்கும் செயல்களில் அதிமுகவினர் ஈடுபடக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயல்லிதா விடுத்துள்ள அறிக்கை:
நடந்து முடிந்த பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. செயற்கையாக வெற்றி பெற்று விட்டதை தாங்கிக் கொள்ள முடியாத, வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், இடையன்பள்ளம் கிளை கழக செயலாளர் பி.குமார் விஷம் அருந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.
தி.மு.க.விற்கு தற்போது கிடைத்துள்ள வெற்றி உண்மையானது அல்ல; நமக்கு தோல்வியும் அல்ல, எனவே, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்ற; வருத்திக் கொள்கின்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அன்பு கட்டளை இடுகிறேன்.
குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும், அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications