காலாவதி, போலி மருந்து வழக்கு – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
சென்னை: காலாவதி மருந்து மற்றும் போலி மருந்துகள் விற்பனை தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்கி விட்டதாக சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் கூறியுள்ளார்.
சென்னையில் வெடித்து வெளிக்கிளம்பிய காலாவதி மருந்து விற்பனை விவகாரம் பல மாநிலத் தொடர்புகளைக் கொண்டதாக வியாபித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மீனாட்சி சுந்தரம், சஞ்சய்குமார், சேகர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் கூறுகையில், சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கும்பகோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படைகள் எஸ்.பிக்களைத் தலைவர்களாகக் கொண்டு செயல்படுகின்றன. டிஐஜி ஒருவர் விசாரணையை மேற்பார்வையிட்டு வருகிறார்.
சோதனை, கைது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம். இதற்காக நாளை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார்.
--
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications