ரூ.42 லட்சம் ஹவாலா பணத்துடன் கடலூரில் 5 பேர் கைது!
கடலூர்: ரூ.42 லட்சம் பணத்தை மடியில் மறைத்து வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த 5 பேர் கடலூரில் போலீசாரிடம் பிடிபட்டனர்.
கடலூரில் நேற்று இரவு போலீசார் நடத்திய சோதனையில் கத்தை, கத்தையாக ரூ.42 லட்சம் ஹவாலா பணம் பிடிபட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 2 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 5 பேரை போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் மடியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை ஏராளமாக வைத்திருந்தை போலீசார் பார்த்தனர்.
விவரம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். ஐந்து பேரையும் திருப்பாதிப்புலியூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் நாகை மாவட்டம் திட்டச்சேரி நடுத்தெருவை சேர்ந்த அல்பைசல் (32), திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர், ஆர்.வி.புரத்தை சேர்ந்த அஷ்ரப்அலி (54), சென்னையைச் சேர்ந்த ஈஸ்வர் (42), சகுபர் சாதீக் (44), கன்னியாகுமரி ஜாகீர் உசேன் (39) என தெரியவந்தது.
இவர்கள் ஐந்து பேரும் மொத்தம் ரூ.42 லட்சம் அளவுக்கு பணக்கட்டுகளை மடியில் மறைத்து வைத்திருந்தனர். இவை கள்ளநோட்டுகளும் அல்ல.
இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது, பணத்தை கொடுத்தது யார், எதற்காக கொடுத்தார்கள் போன்ற விவரங்களை ஐந்து பேரும் முதல்கட்ட விசாரணையில் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.
எனவே, 5 பேர் மீதும் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 41 மற்றும் 102ன் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் உள்ள மத்திய அமலாக்க பிரிவுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு போலீசார், பிடிபட்டவர்களிடம் அடுத்தகட்ட விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications