சோனியாவுக்குப் பயந்தே நளினியை விடுவிக்கவில்லை கருணாநிதி - பழ.நெடுமாறன்
திண்டுக்கல்: நளினி மற்றும் முருகனை விடுதலை செய்தால் சோனியா காந்தியின் அதிருப்திக்கு ஆளாகிவிடுவோம் என்று கருதியே அவர்களை விடுதலை செய்ய கருணாநிதி தயங்குகிறார் என்று தமிழர் தேசிய கட்சி தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், நளினியும், முருகனும் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இவர்களில் பலர் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள்.
ஆனால் நளினியை விடுதலை செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அரசு பொய்யான ஒரு தகவலை நீதி மன்றத்திலேயே கூறுகிறது.
அரசியல் சட்டப்படி, தண்டனைக்குரியவர்களை விடுவிப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் அதிருப்திக்கு ஆளாகி விடுவோம் என்ற கவலையால் தான், நளினியை விடுதலை செய்ய கருணாநிதி மறுக்கிறார் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications