குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மண்ணில் புதைந்ததால் கோவையில் பரபரப்பு!
கோவை: குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களின் அடிப்பகுதி மண்ணில் புதைந்து ஒரு பக்கமாக சாய்ந்து நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை அம்மன்குளம் பகுதியில் ரூ.49 கோடி செலவில் ஆயிரத்து 608 வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டது.
முதல்கட்டமாக 936 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நீர்நிலையை ஒட்டிய பகுதி என்பதால் மண் பரிசோதனை எல்லாம் நடத்தப்பட்ட பின்னரே கட்டிடம் எழுப்பப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை திடீரென்று 2 பிளாக் கட்டிடங்கள் மண்ணில் புதைந்த நிலையில் சாயத்தொடங்கின. கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியில் பகுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
இதுபோன்ற ஆபத்தான கட்டிடங்களில் தங்களை குடியமர்த்தக்கூடாது என்றும், இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும், கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கட்டிடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், ஜவஹர்லால் நேரு நகரபுனரமைப்பு திட்டத்தின்படி, தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த கட்டிட பணிகள் நடைபெற்றன.
சரிந்த நிலையில் உள்ள கட்டிடத்தை ஆய்வு செய்து, இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக இதுபோன்ற அடுக்குமாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என்றார்.
சாய்ந்து விழும் நிலையில் உள்ள இந்த 2 கட்டிடங்களின் மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications