சோயப் சர்ச்சை – ஆயிஷா சித்திக்கிக்கு பாகிஸ்தானில் பெருகும் அனுதாபம்
கராச்சி: சோயப் மாலிக் சர்ச்சையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹைதராபாத் பெண் ஆயிஷா சித்திக்குக்கு பாகிஸ்தானில் அனுதாபம் பெருகியுள்ளது. சோயப்தான் தவறு செய்திருப்பதாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்தள்ளது.
பாகிஸ்தானின் ஜியோ டிவி இதுதொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. சோயப் மாலிக், ஆயிஷா சித்திக்கி சர்ச்சையில் யார் மீது தவறு என்று தனது நேயர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது ஜியோ டிவி.
இதில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களில் 62 சதவீதம் பேர் மாலிக் மீதுதான் தவறு என்று கூறியுள்ளனர். 38 சதவீதம் பேர் ஆயிஷா மீதுதான் தவறு என்று தெரிவித்துள்ளனர்.
தனக்கும், சோயப் மாலிக்குக்கும் இடையே நடந்த திருமணம் தொடர்பான திருமணச் சான்றிதழை பாகிஸ்தான் மீடியாக்களுக்க ஆயிஷா வழங்கியதைத் தொடர்ந்து அவர் மீதான அனுதாபம் அங்கு அதிகரித்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications